மயாமி ஓபன் பைனலில் சாகச சபலென்கா சாதுரிய காஃப்

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காஃப் முன்னேறி உள்ளனர். மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா- கஜகஸ்தானை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை எலெனா ரைபாகினா மோதினர்.

இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய சபலென்கா, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை கோகோ காஃப், செக் குடியரசை சேர்ந்த உலகின் 14ம் நிலை வீராங்கனை கரோலினா முஸோவாவை, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றார். இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சபலென்கா-கோகோ காஃப் மோதவுள்ளனர்.

* ஆடவர் செமிபைனலில் சின்னர்-ஸ்வெரெவ்
மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, ஜெர்மனியை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருண்டாலோவை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றார். இதையடுத்து, இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னருடன், ஸ்வெரெவ் மோதவுள்ளார்.

Related Stories: