முளகுமூடு அருகே பர்னிச்சர் கடை தீயில் எரிந்து நாசம்

தக்கலை, மார்ச் 28 : தக்கலை அருகே முளகுமூடு தாராவிளையில் கல்லுவிளையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பர்னிச்சர் கடையை பூட்டி விட்டு சென்றனர். இதனிடையே பர்னிச்சர்கடை தீயில் எரிந்து கொண்டிருப்பதாக அருகில் உள்ளவர்கள் ரவிக்குமாருக்கும் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்தால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர்கள் தீயில் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து தக்கலை போலீசாரும் விசாரணை மேற்கொண்டள்ளனர்.

Related Stories: