பெருங்குடியில் போலீசார் அணிவகுப்பு

துரைப்பாக்கம், மார்ச் 21: சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்களிக்க வர வேண்டும் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில், அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். பெருங்குடி கல்லுக்குட்டை, அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலை மற்றும் பல்வேறு தெருக்களில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: