கொப்பனாபட்டியில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி,மார்ச்27: பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் தீயணைப்புத்துறையினர் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர்-கொப்பனாபட்டி அம்பாள் பள்ளியில் பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் விழிப்பணர்வு முகாம் நடந்தது.

தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் மாணவ-மாணவிகளுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு தீப்பிடித்தலுக்கான காரணங்கள், அதற்கான பாதுகாப்பான தடுப்பு வழிமுறைகள் மற்றும் தீயை அணைக்கும் செயல்முறை வழிகாட்டல் ஆகியவற்றை செயல்விளக்கம் செய்து விளக்கினர்.

இதனை தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது. பாதுகாப்பாக சிலிண்டரை பயன்படுத்துவது உள்ளிட்ட தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துரை வழங்கினர். மாணவர்கள் செயல்முறைகள் பலவற்றைச் செய்துபார்த்துத் தீயணைப்பு குறித்த தகவல்களைக் கற்றுக்கொண்டனர். இதில் பள்ளி முதல்வர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

Related Stories: