அன்னைக்கு நான் இல்லன்னா உசுரு காலி; என் கையபிடிச்சு அழுதவரு சி.வி.சண்முகம்: போர்க்கொடி தூக்கி ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு வீடியோ

* என் காசுல சோறு போட்டு காப்பாத்துனேன்: உங்க அண்ணனுக்கே கறி, எலும்பு போட்டது நான்தான் என பதிலடி

விழுப்புரம் தெற்கு நகர அதிமுக செயலாளர் பசுபதி, அக்கட்சியின் மாவட்ட செயலாளரான சி.வி சண்முகம் எம்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தலில் பினாமிக்கு சீட்டு கொடுப்பதாகவும், அவர் தொகுதி வெற்றிக்கு மட்டும் பாடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், குறிப்பிட்ட சமுதாய மக்களை கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைப்பதாக கூறிய பசுபதி, கட்சியில் சண்முகத்தின் சகோதரரின் தலையீடு குறித்தும் அம்பலப்படுத்தினார். இதுகுறித்து கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நிலையில் இபிஎஸ் இதைபற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை.

அதற்கு மாறாக சி.வி சண்முகம் தரப்பு மேலும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகக்கூறி தனது நகர செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடிப்படை உறுப்பினர் பதவியும் எனக்கு வேண்டாம் என்று அக்கட்சியிலிருந்து வெளியேறுவதாக பசுபதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், பசுபதி நேற்று பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: என்னை பற்றி சமூக வலைதளங்களில் சில பசங்க கட்சியில் நான் கமிஷன் அடிச்சேன். பிரியாணி தூக்கிட்டு போயிட்டேன் என்று பதிவிடுகிறார்கள்.

சிவியின் தம்பிகளுக்கு ஒருபதிவை சொல்கிறேன். என்னுடைய வரலாறு தெரியாது. 2006 தேர்தலில் அன்றைக்கு திண்டிவனத்தில் உன் அண்ணன் வீட்டில் (சிவி.சண்முகம்) கொலைவெறி தாக்குதல் நடந்தது. உங்க அண்ணனோட பிஏ ராஜாராம் போன் செய்து அழது காப்பாற்ற வாங்கண்ணே என்றார். நான் விழுப்புரத்தில போட்டியிடுகிறேன். நான் தேர்தல் வேலையை தூக்கி போட்டிட்டு காரில் கட்சிக்காரங்களை கூப்பிட்டு 10க்கும் மேற்பட்ட கார்களுடன் சிங்கிள் ரோட்டில் 25 நிமிடத்தில் திண்டிவனம் சென்றோம்.

திண்டிவனத்தில் ஒருபையன்கூட உங்க அண்ணன் (சண்முகம்) வீட்டிற்கு வரவில்லை. கடைசியாக ஒருசேர் போட்டு உட்கார்ந்திருந்தார். செஞ்சியாரும், மாசிலாமணியும்தான் பேசிகொண்டிருந்தார்கள். சி.வி.சண்முகம் என்கையை பிடிச்சு அழுதார். நாங்கதான் பாதுகாப்பு கொடுத்தோம். என்னுடைய காரில் உட்கார வைத்து கொண்டுதான் போலீஸ் டேஷனில் புகார் கொடுத்து, அவரது வீட்டுவாசலில் காவலுக்கு இருந்தோம். நான் வீட்டிற்கு போகும் போதுகூட என்னை அனுப்பாமல் காவலுக்கு வைத்துகொண்டார். அவருக்காக விழுப்புரத்தில் பந்த் போராட்டம் நடத்தினோம்.

என்காசில் சோறுபோட்டு அவருக்கு வீட்டிற்கு என்னுடைய ஆட்களை பாதுகாப்பிற்கு நிற்க வைத்த வரலாறு உங்களுக்கு தெரியாது. அதற்குபிறகு அவருக்கு எஸ்காடாக காரில் சென்றுகொண்டிருந்தோம். அதற்கெல்லாம் அவர் காசுகொடுக்கவில்லை. உயிரை காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடினோம். அப்போது பாமகவை பற்றி உங்களுக்கு தெரியும். எவ்வளவோ அச்சுறுத்தல் இருந்தும் நாங்கள் பாதுகாப்பு அளித்தோம். அதற்குபிறகு விசிகவுடன் தகராறு. அப்போதும் நாங்கள் தான் பிரச்னையை சரிசெய்தோம். ஆனால் எனக்கே இந்த நிலைமை.

நான் ஏதோ கமிஷன் அடிச்சிட்டதாக சொல்றீங்க. அதற்கும் சொல்கிறேன். கடந்த 17ம்தேதி விழுப்புரத்தில் அனைத்துகட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்தான் நடத்தணும். மேடைபோட்டது, கொடிகட்டுனது எல்லாம் என்னுடைய காசு. இதுபோல் எவ்வளவோ செய்துள்ளேன். நீங்கள் என்னடான்னா சிவிஎஸ் போட்ட எலும்புதுண்டை துன்ன நாயிங்களா என்னடா தெரியும். உங்க அண்ணனுக்கே கறி, எலும்பு வாங்கி கொடுத்தது நான்தான். பல அன்னதானம் நிகழ்ச்சியை நடத்தனவ இவங்க போட்ட கறி, எலும்ப வாங்கி சாப்பிடுறவ நான் இல்லை. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

* கட்சியே வேணாம்னு போனவர நீக்கிய எடப்பாடி காமெடி
சி.வி.சண்முகத்துக்கு எதிராக புகார் கூறியும் எடப்பாடி நடவடிக்கை எடுக்கவில்லை என பசுபதி புகார் கூறியிருந்தார். ஆனால், ஒரு வாரமாக இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உங்க கட்சியே வேணாம்னு ராஜினாமா செய்து வெளியே சென்றவரை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

* என்னை சீண்டிட்டே இருந்தா அடுத்து உன் காதல் கதைதான் வெளியே வரும்
பசுபதி மேலும் கூறுகையில், ‘‘இன்னும் சி.வி சண்முகத்தை பற்றி நிறைய கதை இருக்கிறது. திண்டிவனம் ராமமூர்த்தி அதிமுக கூட்டணியில் நிற்கும்போது அவருக்கு வேலை செய்த ஷெரீப்பை ரூ.30,000 காசுக்கு மாற்றுகட்சிக்கு விற்றுவிட்டு, வாங்கி குடிச்ச கதையெல்லாம் இருக்கிறது. இன்னொரு காதல் கதை இருக்கிறது. அதைவேண்டுமானாலும் சொல்கிறேன். பலதகவல்கள், ஆதாரம், சிடி வந்து கொண்டிருக்கிறது.

என்னைப்பற்றி மீண்டும் விமர்சனம் செய்தால் நானும் மயிலத்தில் வந்துகூட தெரு, தெருவாக பேசுகிறேன். விருப்பப்பட்டால் சொல்லுங்க. நீங்க பண்ணபண்ணதான் எனக்கு ரோஷம்வந்து நானும் செய்யத்தோணும். மறுபடியும் உங்க போஸ்டரை போடுங்க, பலமேட்டர்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நான் விலகிசென்றால் எலும்பு பொறுக்கி நாயிங்களா ஜாக்கிரதை. மயிலமும் நாறிடும் விழுப்புரம் மாவட்டமும் தமிழ்நாடு அளவில் நாறிடும்’’ என்றார்.

Related Stories: