சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை பாஜ இன்னும் அறிவிக்காத நிலையில், எடப்பாடியுடன் திறந்த வேனில் தமிழிசையும் கலந்து கொண்டார். இதனால் மயிலாப்பூர் தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் பரவியது. இதுகுறித்து தமிழிசை தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கலந்துகொண்டேன். கடந்த 28ம் தேதி சோழிங்கநல்லூர் தொகுதியில் நடந்த பிரச்சாரத்திலும் எடப்பாடி பழனிசாமியுடன் நான் கலந்துகொண்டேன் என கூறியுள்ளார்.
எடப்பாடியுடன் பிரசாரத்துக்கு போனது ஏன்? தமிழிசை விளக்கம்
- சென்னை
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- மயிலாப்பூர்
- மய்லப்பூர்
- பஜாஜ்
- ஆதிமுக
- Edapadi
- மயிலாபூர் மாவட்டம்
