கோயில் இடத்தில் வைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் அகற்றம்

சென்னை: சென்னை, வில்லிவாக்கம் ராமமந்திர தெருவில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் தற்காலிக அலுவலகம் செயல்பட்டு வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசு இடங்களில் கட்சி சார்ந்த அலுவலகங்கள் செயல்படக்கூடாது என எதிர்க்கட்சியின் தரப்பில் கோயில் செயல் அலுவலர் நித்தியகலாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கோயில் இடத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து அலுவலகத்தை காலி செய்யும்படி த.வெ.க நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட விளம்பர பதாகைகளை கிழித்து அப்புறப்படுத்தினர். கோயில் இடத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இருந்து உடமைகளையும் விளம்பர பதாகைகளையும் அப்புறப்படுத்துவதாக உறுதி கொடுத்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. கோயில் இடத்தில் தற்காலிக அலுவலகத்தை அமைத்தது தொடர்பாக கோயிலின் செயல் அலுவலர் வில்லிவாக்கம் தேர்தல் அதிகாரி மைதிலி இடம் புகார் கூறினார்.

Related Stories: