அண்ணாமலையார் கோயிலில் சவுமியா அன்புமணி தரிசனம்: வேட்பாளர் பட்டியல் வைத்து வழிபாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சவுமியாஅன்புமணி இன்று தரிசனம் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இதில் பாமகவுக்கு (அன்புமணி) 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், பெரம்பலூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகளில் பாமக (அன்புமணி அணி) போட்டியிடுகிறது.

இந்நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக சம்பந்த விநாயகர் சன்னதியில், பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வைத்து பூஜை செய்தார். பின்னர் அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். விரைவில் 18 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அன்புமணி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: