மார்ச் 30 மற்றும் ஏப்.2, 4, 6ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மார்ச் 30 மற்றும் ஏப்.2, 4, 6ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அரசு விடுமுறை நாட்கள் காரணமாக 4 நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. அரசு விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்.1, 3, 5ல் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது . காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மார்ச் 30 முதல் ஏப்.6 வரையான 8 நாட்களில் 4 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

Related Stories: