தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் அனுப்பும் பணி தீவிரம்

 

ஈரோடு, மார்ச் 18: ஈரோடு மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்தும் வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 17 லட்சத்து 40 ஆயிரத்து 222 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள், போலீசார், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்கு செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: