தேர்தலை முன்னிட்டு 12 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரம் வாகன சோதனை

 

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி 12 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்த பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழக-கர்நாடகா மாநில எல்லை சோதனை சாவடிகள், திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களை இணைக்கும் மாவட்ட சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கருங்கல்பாளையம், சித்தோடு, பவானி, அம்மாபேட்டை, பர்கூர், ஆசனூர்காரபள்ளம், கேர்மாளம், மதுவிலக்கு போலீஸ் சோதனை சாவடி, கொடுமுடி, கோபி, பண்ணாரி, பவானிசாகரில் சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனை சாவடிகளில் 2 சுற்றுகளில் 2 போலீஸ் அதிகாரிகள் தலைமையில் வாகன தணிக்கை 24 மணி நேரமும் நடைபெறும்.

Related Stories: