இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

 

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சத்திவேல். இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மகன் சரண் போலியோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதனால், மன உளைச்சலில் இருந்த கீதா நேற்று முன்தினம் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சத்திவேல் சென்று சத்தம் போட்டு அழைத்தும், கீதா பாத்ரூமை திறக்கவில்லை. இதனால், அச்சமடைந்த சத்திவேல் ஜன்னல் வழியாக பார்த்த போது, அவர் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து, பாத்ரூம் கதவை உடைத்து, கீதாவை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்திவேல் அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: