நாகர்கோவில்: நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி பொதுக் கூட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்தது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது:
பொதுமக்களை பாதுகாப்பதாகவும், நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு மக்களுக்காக வந்ததாகவும் சொல்கிறார். பத்திரிக்கையாளரை சந்திக்காத ஒரு தலைவர் எப்படி பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்க்கப் போகிறார். விஜய் தனித்து நிற்கவில்லை. தனித்து விடப்பட்டிருக்கிறார். ஒரு கட்சியில் ஒருத்தன் முட்டாளாக இருக்கலாம். ஒரு கட்சியே முட்டாளாக இருந்தால் என்ன செய்வது? தற்போது ராமதாஸ், சசிகலா கூட்டணி வைக்கிறார்கள். உங்களுக்கு விளையாட வேண்டுமென்றால் வீட்டில் உள்ள பேரக் குழந்தைகளுடன் விளையாடுங்கள். தமிழ்நாட்டு மக்களுடன் விளையாட வேண்டாம் என்றார்.
