புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம்(ஆர்எல்டி) கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனான இவர் ஒன்றிய அமைச்சரவையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஜெயந்த் சவுத்ரியின் மொபைல் எண்ணைநேற்று தொடர்பு கொண்ட மர்ம நபர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துக்ளக் சாலையில் உள்ள காவல்நிலையத்தில் அவர் புகாரளித்தார். அதனடிப்படையில் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரிக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை
- மத்திய அமைச்சர்
- ஜெயந்த் சவுத்ரி
- புது தில்லி
- ராஷ்டிரிய லோக் தளம்
- ஆர்எல்டி
- உத்திரப்பிரதேசம்
- சரண் சிங்
- மத்திய அமைச்சரவை…
