தற்சார்பு இந்தியாவுக்கு ஆரோக்கியமான குடிமக்களே அடித்தளம்: ஜனாதிபதி முர்மு கருத்து

மதுரா: உத்தரபிரதேச மாநிலத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று மதுராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய முர்மு, “குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அதிகாரம் பெற்ற தற்சார்பு மற்றும் வலிமையான இந்தியா சாத்தியமாகும். தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோய் ஒரு மிகப்பெரிய சுகாதார சவாலாக உள்ளது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உயர்தர சிகிச்சை அளிப்பது நோயாளியின் உயிரை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஒருசில குடும்பங்கள் அவர்களின் பொருளாதார சூழல் காரணமாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது சாத்தியமில்லாத நிலை உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும், உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories: