கீழாம்பூர் கேம்ப்ரிட்ஜ் பள்ளியில் மாணவர்களுக்கு கலைபோட்டி

கடையம், மார்ச் 21: கடையம் அருகே கீழாம்பூர் கேம்ப்ரிட்ஜ் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் ரேம்ப் வாக் போட்டி நடைபெற்றது. இதில் கேஜி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவர்கள் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் அலங்கரிக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து மேடையில் நடந்து, தங்களுக்கான தலைப்பில் உரையாற்றியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களின் அழகான நடை, நகைச்சுவை நிறைந்த தோற்றம் மற்றும் தன்னம்பிக்கையான பேச்சு பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக சிறப்பாகப் பங்கேற்ற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகி ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா, தாளாளர் ஜோசப் லியாண்டர் மற்றும் சட்ட ஆலோசகர் மிராக்குலின் வெற்றி பெற்ற மாணவர்களையும், பெற்றோர்களையும் பாராட்டினார்.

Related Stories: