நாசரேத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

நாசரேத், மார்ச் 21: நாசரேத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம் எனவும், அதற்கு மேல் பணம் கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கான ஆவணங்களுடன் செல்லவும் அறிவுறுத்தி உள்ளது. பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட நாசரேத் பகுதியில் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி பரமசிவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று நாசரேத் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாசரேத் சந்தை ரோட்டில் வந்த கார்கள் மற்றும் வாகனங்களை மறித்து சோதனை நடத்தினர். ஆனால் எந்த வாகனத்திலும் பணம் மற்றும் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.

Related Stories: