காயல்பட்டினம் கடற்கரையில் ரமலான் சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஆறுமுகநேரி, மார்ச் 21: புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் நடந்த சிறப்பு தொழுகையில் 3 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் பெரு விழாவான புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் அல் ஜாமிஉல் அஷ்கர் ஜூம்ஆ பள்ளி மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் பித்ரு நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை, நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. பள்ளியின் இமாம் நெய்னா முகம்மது, ரமலான் சிறப்பு தொழுகையை நடத்தினார். பள்ளியின் கத்தீபு அப்துல் மஸ்ஜித் மஹ்ழரி குத்பா சிறப்புரை ஆற்றினார்.

இதைத்தொடர்ந்து நடந்த சிறப்பு தொழுகையில் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டியும், உலகில் அனைத்து மக்களும் ஒற்றுமை, மன அமைதி, நிம்மதியுடன் வாழ வேண்டியும் துஆ செய்யப்பட்டது. மேலும் உலக நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் நிம்மதிகாக்கவும், போரை நிறுத்தி அமைதி பெறவும் வேண்டினர். இதில் பெண்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கு மேல் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைவர் அபுல்ஹசன் கலாமி, செயலாளர் துணி முகம்மது உமர், உதவி தலைவர் நவாஸ் அகமது, பொருளாளர் மஹ்மூதுல் ஹசன், தமுமுக நகர தலைவர் ஜாஹிர் ஹுசைன், மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது நஜீப், நகர செயலாளர் ஹஸன், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் தமீம் அன்சாரி, நகர துணை செயலாளர் முகம்மது நவ்பல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: