பண்ருட்டி, மார்ச் 21: பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் மாயகிருஷ்ணன்(35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடைவீதியில் சுற்றிக் கொண்டிருந்தார். நேற்று மானடிக்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
