சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெருசலத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலில் தொழுகைகளை தடுக்க இஸ்ரேல் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமாக விளங்கும் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இரவு தொழுகைகள் தடுக்கப்பட்டிருப்பது, மனித உரிமைகளுக்கு எதிரான வெளிப்படையான வரம்பு மீறல் ஆகும். உடனடியாக அல்-அக்ஸா பள்ளிவாசலை திறந்து, முஸ்லிம்கள் தங்கள் வழிப்பாட்டு உரிமையை சுதந்திரமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும், இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகமும் தலையிட்டு, முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புனித தலமாக விளங்கும் பள்ளிவாசலில் தொழுகையை தடுப்பதா? ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
- Jawahirullah
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- இஸ்ரேலிய அரசு
- அல்-அக்ஸா மசூதி
- ஜெருசலேம்
- முஸ்லிம்கள்
- ரமலான்…
