தலைமையிடத்தில் முழு அதிகாரம்: ஓ.எஸ்.மணியனை ஓரங்கட்டிய காளியம்மாள்

நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள் இருந்த போது மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட காளியம்மாள், திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார். அமைதியாக இருந்து வந்த காளியம்மாள், நாகப்பட்டினத்தில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்ற திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின், கட்சியினரை வரவேற்று பேசும் போது காளியம்மாள் பெயரையும் குறிப்பிட்டார். இதனால் காளியம்மாள் திமுகவில் இணைய வாய்ப்புள்ளது என பரவலாக பேசப்பட்டது. ஆனால் காளியம்மாள் பதில் கூறாமல் மவுனம் காத்து வந்தார்.

காளியம்மாள் கணவர் தவெகவில் இருப்பதால் காளியம்மாள் விஜய்யுடன் இணையவாய்ப்புள்ளது என பேசி வந்தனர். அப்போதும் காளியம்மாள் மவுனம் காத்துவந்து நிலையில் திடீரென அதிமுகவில் காளியம்மாள் இணைந்தார். அதிமுகவில் இணைய முக்கிய காரணமாக இருந்தது முன்னாள் அமைச்சர் ஜெயபால் என பரவலாக பேசி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘ஜெயபால், காளியம்மாள் ஆகிய இரண்டு பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் (மீனவர்கள்) என்பதால் காளியம்மாளை அதிமுகவில் இணைத்து தனக்கு எதிராக செயல்படும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செல்வாக்கை தலைமையிடத்தில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயபால், ஓ.எஸ்.மணியனுக்கு கூட தெரியாமல் காளிம்மாளை ரகசியமாக அதிமுகவில் இணைய வைத்துள்ளார்.

அதனால் தான் காளியம்மாள், எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.எஸ்.மணியனை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து காளியம்மாள் இணைப்பு விழாவில் நிற்க வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு, தலைமையிடத்தில் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேட்டி கொடுக்க மறுத்த போது காளியம்மாள் தயக்கம் இன்றி பேட்டி கொடுத்தார்’’ என்றனர்.

* தேர்தல் கவுண்டவுன் வாக்கு பதிவுக்கு 35 நாட்கள் தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம் (சி.பி.எம். மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) சென்னை
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்

Related Stories: