மதுரையைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி பால நமச்சியவாம், துணைச் செயலாளர் அழகர்சாமி, பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் மதுரையில் நேற்று கூறியதாவது: ரஜினிக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா பேசியதை பலரும் கண்டித்துள்ளனர். அமைதியாக போக வேண்டும் என்பதற்காக தான் ரஜினி எங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தவெகவினர் தங்களது கொள்கையை சொல்லுங்கள். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் நேரடியாக பதில் சொல்லிருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை வரும் போதும் அவர் பதில் சொல்லவில்லை. கோடி ரசிகர்கள், தமிழ் மக்கள் நேசிக்க கூடியவர் ரஜினி. அனைத்து கட்சியினரும் நேசிக்க கூடியவர் அவர். மூளை வளர்ச்சி இல்லாத ஆதவ் அர்ஜூனா, அதே பாணியில் ரசிகர்களை வழிப்படுத்துகிறார். தவெகவினர் இரவு நேரத்தில் போன் செய்து எங்களை மிரட்டுகின்றனர்.
இதுபோன்ற தற்குறிகளை வைத்திருப்பது விஜய்யின் கெட்ட காலம். ரஜினியின் கண் அசைவிற்காக கோடி பேர் காத்திருக்கிறோம். ஆதவ் அர்ஜூனாவால் பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளது. ஆதவ் அர்ஜூனா தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கக்கூடிய தீய சக்தி. ஆதவ் அர்ஜூனாவை கூடவே வைத்திருந்தால் விஜய்யையே படுகுழியில் தள்ளிவிடுவார். தலைமை உத்தரவிட்டால், யாருக்கு சொல்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுவோம். எம்ஜிஆருக்கு பின் விஜய் என பேச வைப்பது தான் ஆதவ் அர்ஜூனாவின் திட்டம். விஜய் மூளை வளர்ச்சி இல்லாமல் அரசியலை விளையாட்டுத்தனமாக செய்கிறார்.
விஜய்க்கு அரசியல் கட்டமைப்பே இல்லை. விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு எங்கள் தலைவரின் படம் பார்க்க சென்று நெகடிவ் ரிவ்யூ கொடுக்குறாங்க. ரஜினி மன்றத்துக்கு ஆதவ் அர்ஜூனா உதவி செய்ததாக கூறுவது பொய். ரஜினி ரசிகர்கள் இந்த தேர்தலில் நூறு சதவீதம் விஜய்க்கு எதிராக தான் வாக்களிப்போம். அரசியல் சூழல் ரஜினிக்கு தெரியும். அவர் நினைக்கிற அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆரை விட தன்னை பெரிய ஆள் என ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து பேச வைப்பது விஜய்க்கு தான் வீழ்ச்சி. ரஜினிக்கு 40 சதவீத ஓட்டு உள்ளது. ரஜினி ரசிகர்கள் ஓட்டு தவெகவிற்கு இருக்கவே இருக்காது. இவ்வாறு கூறினர்.
* ஆத்தா… நீதான் எங்கள காப்பாத்தணும்: மேல் மலையனூர் கோவிலில் வேட்பாளர் பட்டியலை வைத்து பூஜை போட்ட புஸ்சி ஆனந்த்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தி முதற்கட்ட பட்டியலை தயார் செய்துள்ளார். நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வேட்பாளர்கள் பட்டியலுடன் நள்ளிரவு 11 மணியளவில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு ஊஞ்சல் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உற்சவர் அம்மன் பாதத்தில் தவெக வேட்பாளர் பட்டியலை வைத்து படைத்து வேண்டினார். பின்னர் பட்டியலுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
