பாஜவால் மனஅமைதி போச்சு… ‘சாமி’ வாயில் பீடி பத்த வச்சு முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இவர் அரசியலாக இருந்தாலும், அரசு நிர்வாகத்தில் எந்த முடிவை எடுத்தாலும், முன்னதாக சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலில் சாமி கும்பிட்டபிறகு தான் எடுப்பார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் வந்து இந்த முடிவை எடுத்து வருகிறார். அதேநேரத்தில் தேர்தல் காலங்களில் கூட்டணி முடிவான பிறகு, வேட்பாளர் பட்டியலை அப்பா பைத்தியம் சாமியின் முன்பு வைத்து பூஜை செய்து விட்டு செல்வார்.

அதன்படி நேற்று முன்தினம் அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு வந்தார். மிகுந்த மன கலக்கத்துடன் இருந்த அவர் சாமிக்கு சிறப்பு பூஜையை செய்தார். வழக்கம் போலவே சாமிக்கு பீடியை பற்றவைத்து கொடுத்தார். அதே போல இனிப்புகளை கொடுத்துவிட்டு, பரிகாரத்தை 5 முறை சுற்றிவந்தார். பின்னர் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த இனிப்பு, மிக்சர், பூந்தி உள்ளிட்டவற்றை பிசைந்து பக்தர்களுக்கு அவரது கையாலேயே பிரசாதமாக வழங்கினார். எல்லாம் முடிந்து சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு செல்வது தான் அவரது வழக்கம். ஆனால் நேற்றுமுன்தினம் அவரிடம் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அவருக்கு சாமி மனஅமைதியை கொடுக்கவில்லை. பூஜை முடிந்த பிறகு 2வது முறையாகவும் சற்குரு சாமிக்கு பீடியை பற்றவைத்து கொடுத்தார். கர்ப்பகிரகத்தை சுற்றிவந்தார். அவரது நடவடிக்கையை பார்த்து கோயில் ஊழியர்கள் மனவருத்தம் அடைந்தனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்குள் பாஜ என்றைக்கு வந்ததோ அன்றில் இருந்து ரங்கசாமியால் ஆட்சியை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்த முடியவில்லை. அவருக்கு பாஜவினர் பல்வேறு முறையில் குடைச்சலை கொடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் இம்முறை புதுச்சேரியில் பாஜ ஆட்சியை கொண்டுவர தீவிரமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நன்றாக தெரிந்துள்ள ரங்கசாமி, அதனை பல்வேறு வகையில் தடுத்து வருகிறார். என்றாலும் பாஜவினர் அவரை விடுவதாக இல்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதால் தான் அவர் சேலம் அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு வந்தார். ஆனால் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை. இதுவரை இவ்வளவு மன இறுக்கம் அவருக்கு இருந்ததில்லை என கோயில் ஊழியர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். சாமியை கும்பிட்டதும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் நேற்று முன்தினம் அவ்வாறு ஏற்படவில்லை. இந்த கூட்டணியை உதறி தள்ளிவிட்டால் தான் அவருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என சாமி அருள்வாக்கு சொல்கிறார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

* நேற்று சேலம்… இன்று திருச்செந்தூர்… லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு; திடீர்ன்னு ரைட்டுல போய்ட்டாரு… புதுச்சேரி வந்த பாஜ குழுவுக்கு டிமிக்கி
முதல்வர் ரங்கசாமி சேலம் சென்றிருந்த நேரத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை கூட்டத்தை புதுச்ேசரியில் நடத்தினர். கூட்டணி விவகாரம், யார், யார்? வேட்பாளர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பாஜ, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வழக்கம்போல் ேகாரிமேட்டில் உள்ள தனது வீட்டையொட்டியுள்ள மைதானத்தில் எந்தவித டென்ஷனும் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி, நேற்று காலை டென்னிஸ் விளையாடினார். பின்னர் தனது கட்சி எம்எல்ஏக்களை வீட்டிற்கு அழைத்த முதல்வர், அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே டெல்லியில் இருந்து தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பாஜ ராமலிங்கம், ஆகியோர் புதுச்சேரி திரும்பியுள்ளனர். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தேஜ கூட்டணியில் தக்கவைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். பாஜவினர் டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பிய நேரத்தில் முதல்வர் ரங்கசாமி நேற்று காலை திடீரென திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, முருகன் கோயிலில் பூஜை செய்ய 30 தொகுதிகளில் போட்டியிட உள்ள தனது கட்சி வேட்பாளர்களின் மனுக்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ரங்கசாமியின் இந்த செயல் பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் மூத்த நிர்வாகி கூறுகையில், ‘‘முதல்வர் ரங்கசாமியின் மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதமர் மோடி முன்பே பேசிவிட்டார். கூட்டணிக்கு பிறகே மாநில அந்தஸ்தை கேட்டு பெற்று விடுவார். ஆனால் லஜகவை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் அவர் உறுதியாக உள்ளார். லஜகவை வெளியேற்றினால் பாஜவுடன் கூட்டணி வைத்து விடுவார். அதனை தவிர்த்து பாஜ பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவர் லெப்ட்ல் இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பும் வகையில் அவரது செயல்பாடு குழப்பமாக தான் இருக்கும்’’ என்றார்.

Related Stories: