கடலூரில் பங்க் கடை மாயம் கண்டுபிடித்து தருமாறு புகார்

கடலூர், மார்ச் 12: கடலூர் வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேர்மன்துரை மகள் தேவி (39). இவர் கடலூர் செம்மண்டலம் பெண்கள் விடுதி அருகே பங்க் கடை வைத்திருந்ததாகவும், அந்த பங்க் கடையை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் காணும் பொங்கல் அன்று பார்த்ததாகவும், தற்போது அந்த பங்க் கடையை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தருமாறும், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: