ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்

புதுச்சேரி, மார்ச் 12: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கே.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (40). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் ஜவகர் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் சவாரிக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, பூமியான்பேட்டை சேர்ந்த சுரேந்தர் என்பவர் மோகன்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ேமாகன்ராஜை தகாத வார்த்தையால் திட்டி, சரமாரியாக அடித்து கொலை மிரட்டல் விடுத்து சுரேந்தர் அங்கிருந்து சென்றார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மோகன்ராஜை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்த பிறகு, இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுரேந்தர் மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: