சங்கராபுரம், மார்ச் 11: சங்கராபுரம் அருகே உள்ள கல்லேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன். இவரது மகள் ஜானவி (4). மூரார்பாளையக்கில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். ஜானவிக்கு சிறுவயதில் இருந்து சளி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சளி பிரச்னையால் உடல் நிலை சரி இல்லாமல் இருந்து, பின்னர் சரியானதால் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11 மணி அளவில் ஜானவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த சபரிநாதன், பள்ளி நிர்வாகத்தினர் குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே குழந்தை ஜானவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் சபரிநாதன் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
