10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் 11 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலப் பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத 8 லட்சத்து 95 ஆயிரத்து 528 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் பள்ளி மாணவ, மாணவியர் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர், தனித் தேர்வர்கள் 12 ஆயிரத்து 722 பேர் அடங்குவர். இந்நிலையில், நேற்றைய தேர்வுக்கு 11 ஆயிரத்து 411 மாணவ, மாணவியர் வரவில்லை. அவர்களில் பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்து 369, தனித் தேர்வர்கள் 1042 பேர் அடங்குவர். மேலும், இந்த தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி 2, சேலம் 1 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீது தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: