சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் ஐ.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்த தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்பி, முன்னாள் அமைச்சர்கள் என்.தளவாய்சுந்தரம், செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் ப.தனபால், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, பா.பென்ஜமின், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் கே.ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன், முன்னாள் அமைச்சர் ஏ.ஆ.ராஜலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எம்பி, இணை செயலாளர்கள் பாபுமுருகவேல், பாலமுருகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள், செய்தியாளர்களை சந்திக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், எஸ்.எஸ்.வைகைச்செல்வன், வி.பி.பி.பரமசிவம், மாபா. பாண்டியராஜன், பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
