தவெகவுடன் கட்டிப்பிடித்து வந்தாலும் எடப்பாடி போல ஆயிரம் அடிமைகள் கிடைத்தாலும் பாஜ காலூன்ற முடியாது: – அமைச்சர் ‘பளார்’

 

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன் நேற்று திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் துணைப்பொதுச்செயலாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: ‘மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மிரட்டி, உருட்டி ஆட்சி செய்து விட்டுப் போகலாம். தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்றால் ஒருபோதும் முடியாது.

எடப்பாடி போல ஆயிரம் அடிமைகளை அழைத்து வந்தாலும் தமிழகத்தில் உங்களால் காலூன்ற முடியாது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி இருக்கும் வரையில் முடியவே முடியாது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதனிடம், அதிமுக, பாஜவுடன் தவெக கூட்டணிக்கு முயற்சி குறித்த கேள்விக்கு, அவர்கள் தனித்தனியாக வந்தாலும், ஒன்றாக வந்தாலும், கட்டிப்பிடித்து வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். காங்கிரசை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள். அது நடக்கவில்லை. எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. 1996 தேர்தல் முடிவைப்போல திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Related Stories: