மாமனார் சோற்றில் வாழும் உனக்கே இவ்வளவா? அடங்கு.. இல்லை…அடக்குவோம்… ஆதவ் அர்ஜூனாவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

 

தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜூனா, சமீபத்தில் தவெக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசும்போது, ‘‘ரஜினி மனவலிமையில்லாதவர், அவர் மிரட்டியதால் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், எங்க தலைவர் பயந்து உட்கார்ற ஆளில்லை’’ என்றார். இவரது பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று விஜய்க்கு பாஜ பிரமுகர் அர்ஜூன மூர்த்தி கடிதம் எழுதிருந்தார். மேலும், ஆதவ் ஆர்ஜூனா மற்றும் தவெகவை கண்டித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

குமரி மற்றும் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், ‘‘மாமனார் சோற்றில் வாழும் உனக்கே இவ்வளவுன்னா, 75லும் உழைக்கும் தலைவனை கொண்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும். எங்கள் இமயமலையின் உயரம் தெரியுமா? வரலாற்றில் பலரை அடக்கிய கூட்டம் இது. அடங்கு. இல்ைலயேல் அடக்குவோம்’’ என எச்சரிக்கை செய்யும் வகையில் வாசகங்கள் உள்ளன. சமூக வலைத்தளங்களிலும் ஆதவ் அர்ஜூனாவுக்கு பல்வேறு கண்டனங்களை, ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories: