சேந்தமங்கலம், மார்ச் 14: சேந்தமங்கலம் வட்டாரத்தில் அரளி பூக்களில் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம் புதூர், வாழவந்திகோம்பை, பள்ளம்பாறை, நைனாமலை அடிவாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் அரளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யும் அரளி பூக்களை விவசாயிகள் சேலம், நாமக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கொல்லிமலை அடிவாரத்தில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுவதால் அரளிச் செடிகள் நன்கு வளர்ந்து உள்ளது. தற்போது, வெயில் காரணமாக பூக்களின் வரத்து அதிகத்துள்ளது. அதே சமயம், பூக்களின் தேவை குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூ கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரளி பூக்களின் விலை குறைவு
- Senthamangalam
- நடுக்கோம்பை
- ராமநாதபுரம் புதூர்
- வாழவந்தி கோம்பை
- பள்ளம்பாறை
- நைனாமலை அடிவாரம்
- சேந்தமங்கலம் மாவட்டம்
