மூதாட்டி கொலையில் வாலிபருக்கு ஆயுள் சிறை

 

ராமநாதபுரம், மார்ச் 13: திருவாடானையில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில், பதிவேடு ரவுடிக்கு ஒரு ஆயுள் உட்பட 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திருவாடானை அருகே சி.கே.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள்(65). இவரது உடல் கடந்த 2015ம் ஆண்டு கண்மாயில் மிதந்துள்ளது. புகாரின் பேரில் திருவாடானை போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம்,கீழ துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த பதிவேடு ரவுடியான மகாலிங்கம் (32) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மகாலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்போது சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி கவிதா அளித்த தீர்ப்பில், மகாலிங்கத்துக்கு ஒரு ஆயுள், மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை, இரண்டு பிரிவுகளுக்கு தலா ரூ.5000 என அபராதம் கட்ட வேடும். அபராதம் கட்ட தவறினால் தலா மேலும் ஒராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: