சென்னை: வணிக LPG சிலிண்டர் தட்டுப்பாட்டால், சென்னையில் 215 சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளனர். பெரிய அளவிலான உணவகங்கள் விறகு, மின்சார அடுப்புகளுக்கு மாறியுள்ளன. கியாஸ் வருகையைப் பொறுத்து அவ்வப்போது ஹோட்டல்களை திறப்பதும், உணவு வகைகளைக் கணிசமாகக் குறைத்தும் விற்பனையை மேற்கொள்கின்றனர்.
