ஆசீர்வாதம் வாங்க வந்ததாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் 5.5 பவுன் தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை

செஞ்சி, மார்ச் 12: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரம் பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் மனைவி காமாட்சி (70). நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த தெரிந்த நபர் ஒருவர் காமாட்சி இடம் உங்களுடைய தந்தை எனக்கு ரொம்ப வேண்டியவர். அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன் என்று சொல்லியுள்ளார். அதற்கு காமாட்சி என்னுடைய தந்தை எப்போதோ இறந்து விட்டார் என்று சொன்னதால் ஆசீர்வாதம் வாங்க வந்ததாக சொன்னவர் சிறிது நேரம் காமாட்சியின் வீட்டில் அமர்ந்திருந்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பானையை பார்த்தபோது அதில் வைத்திருந்த காமாட்சியின் ஐந்தரை பவுன் தங்க தாலி செயின் மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவை காணவில்லையாம். இதுகுறித்து மேற்படி நபரான தஞ்சாவூர் மாவட்டம் அரசம்பட்டு என்ற ஊரை சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் கண்ணன் (47) என்பவர் மீது செஞ்சி காவல்நிலையத்தில் காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: