விமானத்தில் ‘பீடி’ புகைத்த பயணி மீது வழக்குப்பதிவு

 

பனாஜி: புதுடெல்லியிலிருந்து கோவா சென்ற விமானத்தின் கழிவறையில் ‘பீடி’ புகைத்த பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடெல்லியிலிருந்து கோவாவிற்கு ஆகாசா ஏர் தனியார் நிறுவன விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற பயணி, விமானத்தின் கழிவறைக்குள் சென்று ரகசியமாக பீடி குடித்ததாகக் கூறப்படுகிறது.

கழிவறையில் இருந்து புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள் கதவை தட்டி ஆஷிஷை வெளியே வரச் செய்தனர். அப்போது அவர் கழிவறைக்குள் பீடி புகைத்தது தெரிந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த எஞ்சிய பீடிகளையும் லைட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. கோவாவின் மோபா விமான நிலையப் போலீசார் அந்தப் பயணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: