லக்னோ: உத்தரபிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 70.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச லோக் பவனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா, “உத்தரபிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 6 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த இரண்டு மாத காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 70,69,810 பேர் படிவம் 6ஐ சமர்ப்பித்துள்ளனர். இதில், 35,72,603 பேர் ஆண்களும், 34,96,911 பேர் பெண்களும் மற்றும் 296 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். இதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க 2,68,682 பேர் படிவம் 7 சமர்ப்பித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
