போர் பதற்றம் காரணமாக பாதிப்பு கனடா, ஆஸி.யில் இருந்து எரிவாயு வாங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் இருந்து எரிவாயு வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் முடிவு செய்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கச்சா எண்ணெய் செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்து செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சா எண்ணெய்க்கான மாற்று வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிடமிருந்து கூடுதலாக எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஒரு துறை அல்லது வழியை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்க்கிறது.

மேலும், இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யா, மேற்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வளைகுடா அல்லாத மத்திய கிழக்கு வழித்தடங்களில் இருந்தும் இந்தியா எரிசக்தியை வாங்குவதால் தற்போதைய நிலைமையை சமாளிக்க முடியும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: