புதுடெல்லி: மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மகளிர் தின வாழ்த்து செய்தி வௌியிட்டுள்ளார். அவர் தன் எக்ஸ் பதிவில், படித்த, சுயசார்பு, தன்னம்பிக்கை, அதிகாரம் பெற்ற பெண்கள் வளமான மற்றும் முற்போக்கான தேசத்தை உருவாக்க வலுவான பங்களிக்க முடியும்.
தற்போதைய இளம் பெண்கள் இந்தியாவின் கனவுகளை வடிவமைக்கிறார்கள். பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் உள்ள மற்றும் அவர்களின் திறன்களின் அடிப்படையில் முன்னேறி வெற்றியை அடைய கூடிய ஒரு சமூகத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மகளிர் தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
