விருதுநகரில் மருத்துவ குணம் கொண்ட கொடிக்காய் விற்பனை அமோகம்

விருதுநகர் : விருதுநகர் அருகே தாதம்பட்டி பகுதியில் ஏராளமான விளைநிலங்களில் கொடிக்காய் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது கொடிக்காய் பழம் சீசன் என்பதால், அதன் துவங்கியுள்ளது. கொடிக்காய் பழங்களை, விவசாயிகள் பறிப்பதற்காக தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 வரை சம்பளம் தருகின்றனர்.

தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவ குணம் கொண்ட கொடிக்காய் பழங்களை ஒரு கிலோ ரூ.200க்கு விவசாயிகள், வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்தபழங்கள் விருதுநகரில் தேசபந்து மைதானம் உள்பட பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் கொடிக்காய் பழங்கள் ஒரு கிலோ ஒன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலை என்றாலும் கொடிக்காய் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Related Stories: