அதிமுக கூட்டத்தில் மயங்கி விழுந்து தொண்டர் சாவு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் காடாம்புலியூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு பண்ருட்டி தெற்கு ஒன்றிய பகுதியிலுள்ள கிராமங்களில் இருந்து வாகனங்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தை சேர்ந்த அதிமுக தொண்டர், கோழி வியாபாரி வேலு(50) என்பவரும் கூட்டத்திற்கு வந்திருந்தார். தொண்டர்கள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து இருந்த வேலு திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: