சென்னை: சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. தொகுதி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் சென்று கொண்டிருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். எங்கள் விருப்பத்தை திமுகவிடம் தெரிவித்திருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது கையெழுத்திடும்போது தெரியவரும். காங்கிரஸுக்கு ஏற்கனவே ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். திமுக – காங். கூட்டணி இயற்கையான கூட்டணி; நம்பிக்கையான கூட்டணி. கையெழுத்திடுவது மட்டும்தான் நிலுவையில் உள்ளது.
