சி.வி.சண்முகத்தின் கொச்சையான பேச்சு கண்டிக்கத்தக்கது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் கருப்பு கொடி: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஒரு மூத்த தலைவர், முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் இவ்வாறு பேசுவது நியாயம் கிடையாது, தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, அவர் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் சார்பாக சி.வி.சண்முகத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய சி.வி.சண்முகம் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவருக்கு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்ட வேண்டும். பாஜ தலைவர்கள் தான் வட மாநிலத்தில் இவ்வாறு பேசுவார்கள், பாஜவுடன் சென்று விட்டதால் அவர்களைப் போல குணங்கள் அதிமுகவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி ஏன் இதனை கண்டிக்கவில்லை. ரஜினி பற்றி ஆதவ் பேசியதை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
