மயான கொள்ளையில் தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சேலம், பிப்.20: சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் கடந்த செவ்வாய்கிழமை அந்த பகுதியில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சியின்போது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது டூவீலரை மறித்து 4 பேர் தகராறு செய்து தாக்கி உள்ளனர். இதில் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அதேபகுதியை சேர்ந்த ராஜீ, கார்த்திக், அப்பு உள்பட 4 பேர் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: