வேதாரண்யத்தில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

வேதாரண்யம், பிப்.25: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேதாரண்யம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் வேதாரண்யம் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கலியராஜன், துணை தலைவராக மாதவன், செயலாளரக பாரதிராஜா,

துணைச் செயலாளராக சுதாகர், பொருளாளராக வீரகுமார், நூலகராக குமரவேல், செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேஸ்வரன், பாலசுப்பிரமணியன், அறிவிச்செல்வன், பாரி வெங்கடேஷ், குலவானம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் முன்னாள் தலைவர் அன்பரசு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

Related Stories: