உளுந்தூர்பேட்டை தொகுதியில் மீண்டும் களம் காணும் திமுக

உளுந்தூர்பேட்டை பிப்.25: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மணிக்கண்ணன் அதிமுக சார்பில் போட்டியிட்ட குமரகுருவை விட 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். திருநாவலூர் தொகுதியில் ஒரு முறையும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் இரண்டு முறையும் என தொடர்ந்து 3 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமரகுரு கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருப்பதால் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக இந்த முறை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கைக்கு உரியவராக உள்ளதால் மீண்டும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் குமரகுரு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக போட்டியிடுமா அல்லது திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற கேள்விக்குறியாக உள்ள நிலையில் வெல்லும் தமிழ் பெண்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் உதயசூரியன் கட்டாயமாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் மீண்டும் திமுக தான் களம் காண உள்ளது என்றும் அனைவரும் தீவிரமாக பணியாற்றி மீண்டும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என பேசியதால் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உளுந்தூர்பேட்டை தொகுதியை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, த.வெ.க என நான்கு கட்சியின் வேட்பாளர்கள் களம் காண உள்ளதால் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Related Stories: