கூல்டிரிங்ஸ் குடித்தவர் சுருண்டு விழுந்து பலி

பெரம்பூர், பிப்.25: வியாசர்பாடி ராஜிவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளின்டன் (25), டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி பிளாக் பகுதியில் உள்ள தனது நண்பர் பிரசாந்த் வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூல்டிரிங்ஸ் குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கிளின்டன் வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரசாந்த், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து கிளின்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், கிளின்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், போதைக்கு அடிமையான கிளின்டன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: