குறைதீர்வு முகாமில் வழங்கும் பொதுமக்களின் மனுக்களுக்கு தரமான தீர்வு வழங்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

திருப்பதி : குறைதீர்வு முகாமில் வழங்கும் பொதுமக்களின் மனுக்களுக்கு தரமான தீர்வு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு முகாமில் கலெக்டர் வெங்கடேஷ்வர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம், தேநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை கலெக்டர் விவரமாக கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், பெறப்பட்ட மனுக்களுக்கு தரமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். மனுதாரர்களின் பிரச்னைகளை புறக்கணிக்கக்கூடாது. மனுதாரரின் திருப்திக்கு ஏற்ப மனுக்களை தீர்க்க வேண்டும்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தரமான தீர்வு வழங்க வேண்டும். மனுக்கள் புறக்கணிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ்வர் கூறினார்.முகாமில் துறை வாரியாக விண்ணப்பங்களின் விவரங்கள்:-

வருவாய் துறை- 259, பஞ்சாயத்து ராஜ்- 32, நகராட்சி நிர்வாகம்- 18, கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கம்- 33, வீடு வேண்டி- 13, கணக்கெடுப்புத் துறை- 17, வீட்டு வசதி வாரியம்- 3, பள்ளிக் கல்வி- 5, வேளாண் துறை- 1, ஊனமுற்றோர் நலம்- 1, நீர்வளம்- 6,ஆண்டோவ்மென்ட்- 1, போக்குவரத்து- 1, ஏ.பி.எஸ்.பி.சி.சி.எல்- 10, குடும்ப நலத்துறை- 6, பி.சி.நலத்திட்டம்- 3, தெலுங்கு கங்கா திட்டம்- 1 உள்ளிட்ட 443 புகார் மனுக்கள் பெறப்பட்டது.

முகாமில் மாவட்ட இணை கலெக்டர் கோவிந்த ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் நரசிம்முலு, சிறப்பு துணை கலெக்டர்கள் தேவேந்தர் ரெட்டி, சிவ சங்கர் நாயக் மற்றும் ரோஸ்மண்ட் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர்.

Related Stories: