*அறநிலைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பாலக்காடு : குருவாயூர் கோயிலில் 1 மணி நேரத்தில் 5 ஆயிரம் இட்லி தயாரிக்கும் நவீன கருவியை அறநிலைத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் தொடங்கி வைத்தார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது குருவாயூர் கோயில்.
இதற்கு கனாடாவில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் 1 மணி நேரத்தில் 5 ஆயிரம் இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை நேர்த்திக்கடனாக வழங்கினார். இதனை அமைச்சர் வி.என்.வாசவன் தொடங்கி வைத்தார்.
இதில், கோயில் சேர்மன் டாக்டர். வி.கே.விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்களான பிரம்மஸ்ரீ மல்லிசேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட், மனோஜ், விஸ்வநாதன், மனோஜ் பி. நாயர், நிர்வாகி அருண்குமார் ஆகியோர் உட்பட தேவஸ்தான ஊழியர்களும் பங்குக்கொண்டனர்.
குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்கு காலை நேரங்களில் இட்லி, உப்புமா, கிச்சடி, சாம்பார், சட்னி மற்றும் மூலிகைக் கலந்து வெந்நீர் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், மதியம் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
காலை நேர சிற்றுண்டிக்கு இட்லி தயாரிப்பதற்காக நவீன வசதியுடன் கூடிய இட்லி தயாரிப்பு இயந்திரம் பயன்படுத்த முதற்கட்டமாக அறிமுகம் அமைச்சர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனால் ஒரு மணிநேரத்தில் 5 ஆயிரம் இட்லி காலை நேரங்களில் தயார் செய்ய முடியும். அவை பக்தர்களுக்கு எளிதில் வழங்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
