தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்

சென்னை: நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது என கனிமொழி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அன்றாட பணிக்கு செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதி அடைந்தனர். வரும் வாரங்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என கனிமொழி வலியுறுத்தினார்.

Related Stories: