தற்கொலை படை தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஆப்கனில் 15 பேர் பலி

 

இஸ்லாமாபாத்: ஒருகாலத்தில் நட்பு நாடுகளாக அறியப்பட்ட ஆப்கானும், பாகிஸ்தானும் அண்மைக்காலங்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு காரணம், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆப்கானில் ஆளும் தலிபான் அரசு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கடந்த சனிக்கிழமை(பிப்.21) பாகிஸ்தானின் கைபர்பக்துன்க்வாவின் பன்னு பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு ராணுவ வீரர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், இஸ்லாமாபாத் நகரில் ஷியா மசூதி, கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜார் மற்றும் பன்னு ஆகிய இடங்களில் வெவ்வேறு தற்கொலை தாக்குதல்கள் நடந்தன.

இந்நிலையில் ஆப்கானின் தற்கொலை படை தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஆப்கான் எல்லையில் உள்ள நங்கர்ஹார், பக்திகா, பெர்மால் மற்றும் ஆர்குன் ஆகிய இடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நேற்று முன்தினம் நள்ளிரவு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஆப்கன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related Stories: